l

ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்களை குறிவைத்து பழிவாங்கும் நடவடிக்கை தொடங்கியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று வரை போராட்டத்தில் இருந்தவர்கள் மட்டுமின்றி நேற்று முன்தினம் மாலை பணிக்கு திரும்புவதாக தகவல் கொடுத்த ஆசிரியர்களையும் பழவாங்கும் நோக்கத்தில் இன்று காலை பள்ளிக்கு சென்ற போது அவர்களை பணி செய்யவிடாமல் உயர் அதிகாரிகளை சந்திக்க அனுப்பி வைக்கப்பட்டனர். அதையும் மீறி பலர் பாடம் நடத்த தொடங்கினார்கள். மாணவர்களின் நலன்கருதி பணிக்கு வந்திருப்பதாக அந்த ஆசிரியர்கள் கூறினார்கள். மேலும் போராட்டத்தில் கலந்து கொண்டு கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்ட 14 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யபட்டு அதற்காண ஆணையை சிறையில் வழங்கினார்கள். அதன் பிறகு கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டவர்களுக்கு இதுவரை பணியிடை நீக்கல் உத்தரவு கிடைக்காததால் அவர்களில் பலர் இன்று பள்ளிக்கு சென்றனர்.

Advertisment

இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை நிர்வாக காரணங்கள் என்று தேர்வு நேரம் என்பதையும் கணக்கில் கொள்ளாமல் இடமாறுதல் செய்யும் முயற்சியும் நடக்கிறது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் லிங்கராஜ் என்ற அறிவியல்ஆசிரியர் 100 கி மீ தள்ளி ஒரு பள்ளக்கு மாற்றப்பட்டுள்ளார்.

Advertisment

இன்று மாலை புதுக்கோட்டை மாவட்டத்தில் உயர் அலுவலரின் உத்தரவினை செயல்படுத்தாத 3 வட்டாரக்கல்வி அலுவலர்களை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் வனஜா அதிரடி நடவடிக்கையாக உயர் அலுவலரின் உத்தரவினை செயல்படுத்தாத மற்றும் கீழ் படியாத கந்தர்வக்கோட்டை வட்டாரக்கல்வி அலுவலர்கள் அலெக்ஸாண்டர், வெங்கடாசலம், அரிமளம் வட்டாரக்கல்வி அலுவலர் கே.ஞானக்கனி ஆகியோரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

இது போன்ற பழிவாங்கும் நடவடிக்கை கல்வித்துறையில் மட்டுமே நடப்பதால் அவர்களை மீண்டும் போராட அழைப்பது போல உள்ளதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர்.