Jacto jio organizations issue

சென்னை டிபிஐ வளாகம் முன்பு போராட்டம் நடத்திய ஜாக்டோ - ஜியோ அமைப்பினரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Advertisment

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்தக்கோரியும், அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும்தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரங்களில்ஜாக்டோ - ஜியோ அமைப்பினர்போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் சென்னை டிபிஐ வளாகம் முன்பு போராட்டம் நடத்த முடிவு செய்து இன்று காலை 10 மணி முதல் அங்கு குவியத் தொடங்கினர். இருப்பினும் காவல்துறை சார்பில் போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டது.

Advertisment

இருப்பினும் காவல்துறையின் அறிவிப்பையும் மீறி ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள்பேருந்து மூலம் அழைத்துச் செல்லப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனால் டிபிஐ வளாகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பாகக் காணப்பட்டது.