Jacto-Jio has announced that it will besiege the tn Secretariat on 28th

திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் ஓட்டலில் நேற்று தமிழ்நாடு ஆசிரியர், அரசு ஊழியர் இயக்கங்களின் ஜேக்டோ – ஜியோ சார்பில் மாநில உயர்மட்டக் குழு மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் சுரேஷ் வரவேற்றார். அன்பரசு தலைமை தாங்கினார், வி.எஸ். முத்து ராமசாமி முன்னிலை வகித்தார்.

Advertisment

கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தேர்தல் காலத்திலும், ஜாக்டோ – ஜியோ மாநில மாநாட்டிலும் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றிட வலியுறுத்தி வருகிற 28 ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடைபெறும்.மேலும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்;உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வை உடனடியாக வழங்க வேண்டும்;இடைநிலை ஆசிரியர்களுக்கு, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, உடற்கல்வி இயக்குநர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்;அரசின் பல்வேறு துறைகளில் 30 சதவீதத்திற்கு மேலாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்;உள்ளாட்சி அமைப்புகளிலும் பல்வேறு அரசுத் துறைகளிலும் தனியார் முகமை மூலம் பணியாளர்களை நியமனம் செய்வதை உடனடியாக தடை செய்திட வேண்டும் உள்ளிட்டபல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.

Advertisment

கூட்டத்தில் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலப் பொருளாளரும், மாவட்ட ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளருமான திருச்சி நீலகண்டன் உட்பட நிர்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டனர். முடிவில் மாநில ஒருங்கிணைப்பாளர் வின்சென்ட் பால்ராஜ் நன்றி கூறினார்.