Protest

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ சார்பில் தமிழகம் முழுவதும் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதேபோல் கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பில் உள்ளவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

Advertisment

Protest

அரியலூர் மாவட்டம், செந்துறையில் ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் சாலைமறியல் நடைபெற்றது. 300க்கும் மேற்ப்பட்ட ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர். ஒன்றியத்தில் பெறும்பாலான பள்ளி அலுவலகங்களில் பணி நடைபெறவில்லை. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை செந்துறை வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் மு. ஞானமூர்த்தி சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

Advertisment