Skip to main content

போலீசார் கைது செய்யாததால் பஸ்  மறியலில் குதித்த  ஆசிரியர்கள்!

Published on 25/01/2019 | Edited on 25/01/2019
m

 

புதிய ஓய்வு ஊதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் மூன்றாவது நாளாக போராட்டத்தில் குதித்தனர்.


    அதுபோல் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஜாக்டோ ஜியோ அமைப்பினர் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மேற்பட்ட அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் பெருந்திரளாக யூனியன் ஆபீஸ் அருகே திரண்டு போராட்டத்தில் குதித்தனர்.

  

m


இப்படி போராட்டத்தில் குதித்த அரசு ஊழியர்களையும் ஆசிரியர்களையும் போலீசார் பெயருக்கு கைது செய்தனர். இதில் போராட்டத்தில் ஈடுபட்ட பெரும்பாலான அரசு ஊழியர்களை கைது செய்யவில்லை.  இதனால் டென்சன் அடைந்த ஜாக்டோ ஜியோ  அமைப்பைச் சேர்ந்த அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் அங்கிருந்து ஊர்வலமாக பஸ் ஸ்டாண்ட் சென்று பஸ் ஸ்டாண்டு பகுதியில் உள்ள எம்ஜிஆர் சிலை மற்றும் பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் பஸ்களை மறித்து தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் குதித்தனர்.

 

இதனால் அரை மணி நேரத்துக்கு மேல் பஸ் ஸ்டாண்டில் இருந்து வெளியே போகும் பஸ்களும் பஸ் ஸ்டாண்டுக்கு வரும் பஸ்களும் வரமுடியாமல் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விஷயம் காக்கிகளின் காதுக்கு எட்டவே உடனே போராட்டத்தில் அங்கங்கே ஈடுபட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பினரை கைது செய்து திருமண மண்டபத்துக்கு அழைத்துச் சென்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்