Advertisment

15 ஆண்டுகளாக குழந்தை இல்லாத தம்பதியினருக்கு ஒரே பிரசவத்தில் அடித்த ஜாக்பாட்!

xj

Advertisment

கேரளாவில் தம்பதியினர் ஒருவருக்கு நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் பிறந்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவைச் சேர்ந்தவர் சுரேஷ். இவருடைய மனைவி பிரசன்னா. இவர்கள் இருவருக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஆனால் குழந்தை பாக்கியம் இல்லை. இதனால் இவர்கள் இருவரும் பல்வேறு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை எடுத்து வந்துள்ளனர். ஆனால் 10 வருடங்களை தாண்டியும் அவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் வருத்தத்தில் இருந்த அவர்கள் அதன் பிறகு சிகிச்சை எடுத்துக்கொள்வதை நிறுத்தியுள்ளனர். இந்நிலையில் கடந்த ஆண்டு பிரசன்னா கர்ப்பமாகியுள்ளார். இதனால் மகிழ்ச்சியில் இருந்த அவர்களுக்கு கடந்த மாதம் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் பிறந்தது. இந்நிலையில் நான்கு குழந்தைகளை ஒரே நேரத்தில் வளர்க்க கஷ்டமாக உள்ளதாகவும், போதிய வருமானம் இல்லாதுஇருப்பதால் என்ன செய்வது என்று தெரியமல் முழிப்பதாகவும் சுரேஷ் தெரிவித்துள்ளார். அவரின் நிலையை கண்டு பலரும் அவருக்கு பொருளாதார ரீதியாக உதவி வருகிறார்கள்.

child
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe