முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆறாவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுகவினர் அவரது நினைவிடம் உள்ள மெரினாவில் குவிந்து வருகின்றனர்.

தற்பொழுது ஒற்றைத் தலைமை தொடர்பான விவகாரத்தில் அதிமுக ஓபிஎஸ் அணி, எடப்பாடி அணி எனப் பிரிந்து கிடக்கும் நிலையில், எடப்பாடி அணியைச் சேர்ந்தவர்கள் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதற்காக அனைவரும் கருப்புச் சட்டையில் வந்திருந்தனர். அதன் பிறகு அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் எடப்பாடி பழனிசாமி உரையாற்றி உறுதிமொழி ஏற்றனர். அதனைத் தொடர்ந்து ஓபிஎஸ் அணியினர் பேரணியாக வந்து ஜெ. நினைவிடத்தில் மரியாதை செலுத்திவிட்டு உறுதிமொழிஏற்றனர்.

Advertisment

இந்நிலையில், தற்பொழுது அமமுகபொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கட்சி சார்பில் அவரது கட்சியினருடன் காரில் பேரணியாக ஜெ. நினைவிடம் சென்று வருகிறார்.

Advertisment