Published on 16/11/2021 | Edited on 16/11/2021

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் விசாரணை காவல் அதிகாரியாகவும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை காவல் கண்காணிப்பாளராக இருந்த நல்லம்மநாயுடு (வயது 83) வயது முதிர்வு காரணமாக காலமானார்.
இந்த நிலையில், சென்னை பெரவள்ளூரில் உள்ள அவரது வீட்டிற்கு இன்று (16/11/2021) நேரில் சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நல்லம்மநாயுடுவின் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இந்த நிகழ்வின் போது, தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் உடனிருந்தனர்.