Advertisment

ஜெ. மரணம் விவகாரம்: மர்மத்தை உடைக்கிறார் டாக்டர் கிரிநாத்!!!

JAYALALITHA

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் பிரபல இருதய சிகிச்சை நிபுணர் மருத்துவர் கிரிநாத் ஆஜரானார். ஜெ. மரணம் தொடர்பாக முக்கியமான விஷயத்தை பதிவு செய்திருக்கிறார். ஜெ.வுக்கு சிகிச்சை அளிக்கும்போதே இருதய பாதிப்பு உள்ளது, லெப்ட் வென்றிக்கல் (left ventricle problems) பாதிப்பு என்று தெரிவித்துள்ளார்.

Advertisment

ஜெ.வுக்கு லெப்ட் வென்றிக்கல் பாதிப்பு ரொம்ப நாளாக இருந்து வந்தது என்று டாக்டர் சிவக்குமார் சொல்லியிருக்கிறார். ஆனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெ.வுக்கு நுரையீரல்நோய் தொற்று, காய்ச்சல்தான் என சொல்லி வந்தார்கள்.

Advertisment

ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, டாக்டர் கிரிநாத் பார்த்திருக்கிறார். ஜெயலலிதாவோட இருதய பிரச்சனையை சரி செய்யவில்லை என்றால், ஜெயலலிதாவுக்கு ஆபத்து என டாக்டர் பாபு ஆப்ரகாம் தலைமையிலான மருத்துவ குழுவுடன் வாக்குவாதம் செய்திருக்கிறார். இறுதியில் ஜெ.வின் மரணம் இருதய நிறுத்தத்தில்தான் கார்டியாக் அரெஸ்ட்டில்தான் நடந்திருக்கிறது.

ஜெ. வுக்கு முறையான சிகிச்சை வழங்கப்படவில்லை என்ற கேள்விகளுக்கும், அவரது மரணம் எப்படி நிகழ்ந்தது என்ற கேள்விகளுக்கும் டாக்டர் கிரிநாத் பதில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Arumugasamy Commission death issue jayalalitha
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe