/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ASA.jpg)
ஜெ.வின் கார் ஓட்டுநர் கனகராஜ் உடற்கூறு ஆய்வில் மது அருந்தியதாக சேலம் டிஐஜி விளக்கமளித்துள்ளார்.
ஜெ.வின் கார்ஓட்டுநர்விபத்தில் இறந்தது குறித்து நடத்தப்பட்ட விசாரணை பற்றி சேலம் சரக டிஐஜி செந்தில்குமார் பேட்டி அளித்தார். அப்போது,
2017 ஏப்ரல் 28ல் ஆத்தூர் அருகே விபத்தில் சிக்கி கனகராஜ் உயிரிழந்தார்.
உடற்கூராய்வில்கனகராஜ் மது அருந்திதியுள்ளது தெரியவந்துள்ளது,சம்பவம் நடந்து இரண்டு ஆண்டுகளுக்குப்பின் கனகராஜன் பற்றிதனபால் பேசுவது ஏன் என்று தெரியவில்லை.மது அருந்திவிட்டு தவறான திசையில் வாகனம் ஓட்டி வந்த கனகராஜ் கார் மீது மோதி அதன்மூலமே உயிரிழந்தார். தற்போது புதிதாகபுகார் கூறும்தனபால்விபத்து நடந்தத மறுநாள்தற்செயலாக நடந்த விபத்து என்றுதான் கூறியிருந்தார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/AS.jpg)
தற்போது தனபால் எதனால் மாற்றிப் பேசுகிறார் என்பது தெரியவில்லை. இந்த விபத்தில்ஆட்சேபனை இருப்பதாக தனபால் இதுவரை காவல்துறையிடம் ஏதும் புகார் அளிக்கவில்லை. சேலம் சரகத்தில்விபத்து நடந்திருப்பதால் அது தொடர்பாக உங்களுக்கு தெரிவிக்க வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது. சம்பவத்தன்று வாகனத்தில் வந்த கனகராஜ் வலதுபுறமாக ஏறிச் சென்றுதான் விபத்தில் சிக்கினார். இந்த விபத்து தொடர்பான அறிவியல்பூர்வமான சான்றுகளை உங்களுக்கு தெரிவித்துள்ளோம்.சம்பவத்தை நேரில் பார்த்ததாகஎந்தசாட்சிகள் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2021-09/fountain-pen-handwriting-012.jpg)