Advertisment

ஜெ மற்றும் சசிகலாவின் வங்கிக்கணக்குகள் முடக்கம்!

 J and Sasikala's bank accounts frozen!

நீலகிரி மாவட்டம் கொடநாடு கொலை, கொள்ளைவழக்கில் விசாரணையானது மிகத்தீவிரமாக நடைபெற்று வருகிறது.கொடநாடு கொலை வழக்கில் ஏற்கனவே காவல் உதவி கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டநிலையில் இதில் மேலும் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இதனால்இந்த வழக்கில் மொத்தம் ஐந்து தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. வழக்கு சாட்சியங்கள் மற்றும் குற்றம்சாட்டப்பட்டவர்களைநேரில் ஆஜராகச் செய்து விசாரணை நடைபெற்றது.

Advertisment

இந்நிலையில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, சசிகலாவுக்கு சொந்தமான கோடநாடு, கர்சன் எஸ்டேட்டுகளுக்கு வரிபாக்கி நிலுவையில் இருந்த சூழலில், அந்த இரு எஸ்டேட்களின் வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன. வருமானத்துக்கு குறைவாக கணக்கு காட்டியதால் கோத்தகிரி பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் வைக்கப்பட்டிருந்த இந்த இரண்டு எஸ்டேட்களின் வங்கிக் கணக்குகளை வருமானவரித்துறை முடக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

jayalalitha Kodanad Estate sasikala
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe