Advertisment

அஜித்துக்கு வாழ்த்து தெரிவித்த ஜெ.அன்பழகன்!

anbazhan

விஸ்வாசம் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

Advertisment

அஜித் - சிவா கூட்டணியில் உருவாகிவரும் படம் ’விஸ்வாசம்’. இந்தப் படம் மூலம் அஜித்துடன் 4 வது முறையாக இயக்குநர் சிவா கூட்டு சேர்ந்துள்ளார். அஜித் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் கோவை சரளா, விவேக், யோகி பாபு, தம்பிராமய்யா உட்பட்டவர்களும் நடித்து வருகின்றனர். இமான் இசையமைக்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது.

Advertisment

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று அதிகாலை 3.40 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட சில மணி நேரங்களிலே அஜித் ரசிகர்கள் விஸ்வாசம்ஃபர்ஸ்ட்லுக் என்ற ஹேஷ் டேக்கை சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டாக்கி வந்தனர். இந்த நிலையில் இன்று அதிகாலை அந்தப் படத்தின் பர்ஸ்ட்லுக் வெளியானது. இது அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Viswasam-First

இதுகுறித்து, திமுக சென்னை மேற்கு மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏவும், திரைப்பட தயாரிப்பாளர் & விநியோகிப்பாளருமான ஜெ.அன்பழகன் தனது டிவிட்டர் பதிவில்,

அஜித் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து. விஸ்வாசம் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மிக அழகாகவும், ஆற்றல் மிக்கதாகவும் இருக்கிறது. அஜித்துக்கும், விஸ்வாசம் படக்குழுவினருக்கும் எனது வாழ்த்துக்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.

first look j anbazhagan viswasam
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe