Advertisment

ஜெ.அன்பழகன் உருவப்படத்துக்கு ஸ்டாலின் அஞ்சலி!

J ANBAZHAGAN CHENNAI ANNA ARIVALAYAM

Advertisment

சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான ஜெ.அன்பழகன் இன்று காலை காலமானார்.

அவருக்கு வயது 62. கடந்த 2- ஆம் தேதியன்று மூச்சுத் திணறலுடன் சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்குக் கரோனா பரிசோதனை செய்ததில் கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து, தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் இன்று காலை 8 மணி அளவில் சிகிச்சை பலனின்றி காலமானார். அதைத் தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் அன்பழகன் உடல் கண்ணம்மாப்பேட்டை மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.

J ANBAZHAGAN CHENNAI ANNA ARIVALAYAM

Advertisment

இதனிடையே சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஜெ.அன்பழகனின் உருவப்படத்துக்கு மலர்த்தூவி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்அஞ்சலி செலுத்தினார். மேலும் டி.ஆர்.பாலு, கனிமொழி, உதயநிதி ஸ்டாலின், தயாநிதி மாறன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.

anna arivalayam Chennai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe