தமிழர்களால் சிறப்பாகக்கொண்டாடப்படும்தனிப்பெரும் விழா தைப்பொங்கல்.உழவர்கள், உழைக்கும் மக்களின்இயற்கை தெய்வமாகக்கருதப்படும் சூரியனுக்கும் உழவுக்குத் துணை செய்யும்மற்ற உயிர்களுக்கும் நன்றி கூறும் விதமாக இவ்விழா கொண்டாடப்படுகிறது.

Advertisment

ஆடிப்பட்டம் தேடி விதைத்து, விதைத்ததைஅறுவடை செய்து பயன் அடையும்மாதம்தை மாதம் ஆகும். அறுவடையில் கிடைத்த நெல்லின்புத்தரிசியைச்சர்க்கரை, நெய் கலந்து புதுப்பானையில் பொங்கலிட்டு சூரியனுக்கும், மாட்டுக்கும் படைத்து குடும்பத்தோடு உண்டு மகிழ்வதுவழக்கம். நீர் வளம் கொண்ட இடங்களில் மூன்று வேளாண்மை நடக்கும்.நீர் வளம்இல்லா இடங்களில் மழைநீரைப்பயன்படுத்தி ஒரு வேளாண்மைதான் விளைவிக்க முடியும். அதுவும் தைமாதத்தில்தான் அறுவடை செய்யப்படும்.

Advertisment

பொங்கல் கொண்டாடுவதன் பின்னுள்ள நோக்கமும் முழுமையான பழக்கமும் தெரியாதவர்கள் கூட நம்பாரம்பரியத்தைப்பின்பற்ற வேண்டுமென்ற எண்ணத்திலும் மகிழ்ச்சியிலும் கொண்டாடி வருகின்றனர்.

கடந்த வருடம் முழுவதும் நாடேகரோனாவினால்வீட்டிலே முடங்கி இருந்தபோதும் தொடர்ந்து விருப்பத்துடன் வெளியே வந்து உழைத்தவர்களுள் விவசாயிகள்மிக முக்கியமானவர்கள்.கரோனாஊரடங்கால்ஏற்பட்டபொருளாதார இழப்பிலிருந்து மெல்ல மீண்டு வந்துஊக்கமாகப்புத்தாண்டு, பொங்கல் எனமக்கள்கொண்டாடி வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில்சமீபமாகத்தொடர்ந்து விடாமல் மழை பெய்த காரணத்தால் தமிழகத்தில் பல விவசாயிகளின்வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது. இதனால்அவர்கள் கொண்டாட வேண்டிய இந்தத் திருவிழாஅவர்களைச்சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தமிழகத்தில் பல இடங்களில் விவசாயம் பாதிப்பு அடைந்த போதிலும் விருதுநகர் மாவட்டத்தில்செவல்பட்டிஉள்ளிட்டசில இடங்களில் ஏற்பட்ட பாதிப்புகள்நாம் அனைவரும் கூர்ந்து கவனிக்க வேண்டிய ஒன்று. அந்த ஊர் மக்களிடம் இதுகுறித்து பேசியபோது,"மற்ற இடங்களில் மூன்று போகம் விளைச்சல் செய்கிற நிலையில், விருதுநகர் போன்ற வறண்ட பூமியில்ஒரு போகம் விளைந்தாலே அரிது.காரணம்நாங்கள் முழுவதுமாய்மழையை நம்பியே விளைவிக்கிறோம். அப்படிவிளைந்தமக்காச்சோளம், உளுந்து போன்ற பயிர்கள் அறுவடை செய்ய வேண்டிய இந்த மாதத்தில்அளவுக்கு மீறியகடும் மழையால் அனைத்து பயிர்களும் அழுகி எதற்கும் உபயோகம் ஆகாத நிலை உருவாகிவிட்டது.

இந்த மாவட்டத்தில்மட்டும் பாதிக்கப்பட்ட நிலம்300 ஏக்கருக்கும் மேலாக இருக்கும். இதனால் வருடத்திற்கு ஒருமுறைமட்டுமேவிவசாயம் செய்து வாழ்ந்து வரும்எங்கஊர் மக்களின் வாழ்வாதாரம் கடும்பாதிப்புக்குள்ளாகியிருக்கு.எல்லாம்போச்சு...எங்களுக்குப்பொங்கலேஇல்லை" என்று வேதனையுடன் கூறுகிறார்கள்.

அவர்கள் இல்லையேல் நாம் இல்லை என்பதை நினைவில் கொண்டு அவர்களுக்கு உரிய உதவியையும் நிவாரணத்தையும் அரசு கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதுஅம்மக்களின் கோரிக்கையாக உள்ளது.