
கோவை மாவட்டம், உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த 23ம் தேதி அதிகாலை 4 மணி அளவில் நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக மத்திய அரசு விசாரணைக்கு உத்தரவிட்டிருந்த நிலையில் தற்போது என்.ஐ.ஏ எனப்படும் தேசியப் புலனாய்வு முகமை வழக்குப்பதிவு செய்துள்ளது.
இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 5 பேருக்கும் 3 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், முகமது ரியாஸ், முகமது தல்கா, முகமது நவாப் இஸ்மாயில், முகமது அசாருதீன், ஃபிரோஸ் இஸ்மாயில் ஆகிய ஐந்து பேரும் மூன்று நாள் காவலில் எடுக்கப்பட்டு தனிப்படை போலீசாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில்இன்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் இந்த விசாரணையில் கைது செய்யப்பட்ட நபர்களில் ஒருவரான ஃபிரோஸ், கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் நாள் இலங்கை தேவாலயத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்களுடன் தொடர்பில் இருந்ததாக கைது செய்யப்பட்ட முகமது அசாருதீன், என்பவரையும் ரஷீத் அலி என்பவரையும் கேரள சிறையில் சந்தித்ததை ஒப்புக் கொண்டதாகவும்,சந்தித்தது உண்மைதான் என வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)