Published on 24/10/2021 | Edited on 24/10/2021

நடிகர் ரஜினிகாந்திற்கு மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக பல்வேறு திரைத்துறையினர் நடிகர் ரஜினிகாந்திற்கு வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அவரது போயஸ் கார்டன் இல்ல வாயிலில் இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ''திரை உலகின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது எனக்கு கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி. இந்த நேரத்தில் கே.பி சார் என்னுடன் இல்லை என்பது வருத்தமாக இருக்கிறது. நான் விருது வாங்கிய பிறகு உங்களிடம் பேசுகிறேன்'' என்றார்.