Advertisment

'வதந்தியே... நம்பாதீர்கள்...'-மின்சார வாரியம் மறுப்பு

 'It's rumour...don't believe...'-Electricity Board Denial

Advertisment

தமிழகத்தில் ஜூலை 1 முதல் மீண்டும் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில் அந்த தகவல் முற்றிலும் போலியானது, வதந்திகளை நம்ப வேண்டாம் என தமிழக மின்வாரியம் தெரிவித்துள்ளது.

முன்னதாக தமிழகத்தில் ஜூலை 1 முதல் மின் கட்டணம் உயர இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது. சமூக வலைத்தளங்களில் உலாவிய இந்தத் தகவல்கள் மின் நுகர்வோர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருந்தது. இந்தநிலையில் அரசு சார்பில் மின்சார வாரியம் இந்த தகவலை போலியானது என மறுத்துள்ளது. '2022 ஆம் ஆண்டு ஜூலையில் வெளியான செய்தியை தற்போது சமூக வலைத்தளங்களில் விஷமிகள் பகிர்ந்து வருகின்றனர். எனவே ஜூலை 1 முதல் மின் கட்டணம் உயர்வு என பரவும் செய்திவதந்தியே. தற்போது மின்கட்டண உயர்வு செய்யப்படவில்லை. வதந்திகளை நம்பாதீர்கள்' என அரசு சார்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

announce TNGovernment electicity
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe