Advertisment

''உண்மையிலேயே லைஃப்ல இது வித்தியாசமாக இருக்கு''-சிம்பு பேட்டி!

சிம்பு - கௌதம் மேனன் கூட்டணியில் வெளியான 'விண்ணைத்தாண்டி வருவாயா', 'அச்சம் என்பது மடமையடா' ஆகிய படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இவர்கள் கூட்டணியில் மூன்றாவது முறையாக வெளியாகியுள்ள படம் 'வெந்து தணிந்தது காடு'. கேங்ஸ்டர் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Advertisment

இந்நிலையில் இன்று வெந்து தணிந்தது காடு படக்குழுவினரின் சக்ஸஸ் மீட் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் படத்தின் இயக்குநர், கதாநாயகன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சிம்பு, ''இந்த படம் எக்ஸ்பிரிமென்டலான படம். ரெகுலராக கமர்சியல் படங்களில் ஹீரோவோட பில்டப், சாங்ஸ் பர்பாமன்ஸ் எதுவுமே இந்த படத்தில் இல்லை. இது டோட்டலா ரொம்பவும்சீரியஸ்படம். தமிழில் இந்த மாதிரி ஒரு படம் ட்ரை பண்ணலாம்'னு கௌதமன் சார் சொன்னாரு. அது எனக்கு ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருந்தது. இன்று அதனுடைய ரெஸ்பான்ஸ் ரிலீஸ் அப்புறம் பார்க்கும் பொழுது உண்மையிலேயே ரொம்ப சந்தோஷமா இருக்கு. இதை உண்மையிலேயே கொண்டு போய் சேர்த்தது நீங்க தான். உங்கள் எல்லாருக்கும் எனது நன்றி. இந்த படம் ஆரம்பிக்கும் போதுஎன்கிட்ட வேல் சார் என்ன சொன்னாரோ படம் முடியிற வரைக்கும் அதே மாதிரி இருந்தாரு. நல்லபடியா படம் ரிலீஸ் ஆச்சு. ஏன் இந்த சந்தோஷம் என்றால் நான் அவ்வளவு வலிய பார்த்து இருக்கேன். நீங்க எல்லாருமே கூட இருந்து பார்த்திருக்கிறீங்க. அவ்வளவு கஷ்டத்தில் இருந்து, சினிமாவில்ஹீரோ டோட்டலா காலி ஆகி தெருவுக்கே வந்துருவாரு, அதுக்கப்புறம் ஒரு காயினை தூக்கிப் போட்டு அப்புறம் மெதுவா மேல வர மாதிரி, உண்மையிலேயே லைஃப்லநடப்பது ரொம்ப வித்தியாசமாக இருக்கிறது''என்றார்.

Advertisment

silambarasan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe