Advertisment

சுயநலத்தை விட்டு மக்கள் பணியாற்றுவது நமது கடமை- முதல்வர் வேண்டுகோள்!!

eps

Advertisment

போராட்டத்தை கைவிட்டுவிட்டு ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பணிக்கு திரும்புமாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்,

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள்பணியை நாம் அனைவரும் ஒன்றுபட்டு தொய்வின்றி தொடர்ந்து மேற்கொள்வோம். எனது அன்பான வேண்டுகோளை ஏற்று நாளையே அனைவரும் பணிக்கு திரும்ப கேட்டுக்கொள்கிறேன். அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வைதமிழக அரசு அமல்படுத்தி உள்ளது.ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரையை ஏற்று அரசு ஊழியர்களின்ஊதிய உயர்வால்தமிழக அரசுக்கு கூடுதலாக 14ஆயிரத்து 500 கோடி நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது.மாநில அரசு மக்களின் நலனுக்காகவே செயல்பட வேண்டும். அரசின் செயல்பாட்டில் அரசு ஊழியர்களுக்கு முழு பங்கு உள்ளது. சுயநலத்தை மட்டும் கருதாமல் மக்கள் நலம் கருதி பணியாற்றவேண்டும். சில நேரங்களில் சுயநலத்தை விட்டு கொடுத்து மக்கள்பணியாற்றுவது நமது கடமை எனக் கூறியுள்ளார்.

protest jacto geo Edappadi Palanisamy eps
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe