Advertisment

''அது குட் டச் இல்லம்மா...'' குழந்தையின் புகாரில் பாய்ந்த போக்சோ..! 

அந்த மாமா என்னிடம் நடந்து கொள்வது குட் டச் இல்லம்மா.. என தாயிடம் எட்டு வயது குழந்தை புகாரளிக்க, கடந்த ஒரு மாதமாக குழந்தைக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த பக்கத்து வீட்டுக்காரர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளான்.

Advertisment

police

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி காவல்துறை துணைச்சரகம் சாக்கோட்டை பழைய சந்தை ரோட்டினை சேர்ந்தவர் லட்சுமி. கணவரை பிரிந்து தனது தாயுடன் இருந்து கூலி வேலை செய்து வரும் இவருக்கு மூன்றாம் வகுப்பு படிக்கும் பெண் குழந்தை உண்டு. குழந்தையை பள்ளிக்கு அனுப்பிவிட்டு கூலி வேலைக்கு செல்லும் லெட்சுமி சம்பவத்தன்று பள்ளி விடுமுறை என்பதால், குழந்தையை வீட்டினில் விட்டு சென்றிருக்கின்றார்.

Advertisment

இவ்வேளையில், வீட்டில் யாருமில்லாததை அறிந்த பக்கத்துவீட்டில் வசிக்கும் புத்தம்பட்டி செல்லையா மகன் அடைக்கலம் தனது வீட்டினில் வந்து விளையாடுமாறு குழந்தையை அழைத்து சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுப்பட்டுள்ளான். வீட்டிற்கு வந்த அந்த குழந்தையும், " அம்மாவிளையாட மாமா அவர் வீட்டிற்கு அழைத்து சென்றார். அவர் என்கிட்ட நடந்துக்கொண்டது குட் டச் இல்லம்மா.." என நடந்ததை விளக்கிக் கூற, தாயாரும் காவல் நிலையத்தில் புகாரளிக்க, சாக்கோட்டை இன்ஸ்பெக்டர் ஜாக்குலின் விசாரணையில், 40 வயது அடைக்கலம் கடந்த ஒரு மாதமாக குழந்தையை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்தது தெரியவர, அவன் மீது போக்சோ வழக்குப் பதியப்பட்டு கைது செய்யப்பட்டு ரிமாண்டிற்கு அனுப்பபட்டுள்ளான்.

arrest Child abuse police Sexual Abuse sivakangai
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe