சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் குமரப்பா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ‘இனிமேல் வழக்குகளை உயர் நீதிமன்ற இணையதளத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இனிமேல் இ-பைலிங் முறை பின்பற்றப்பட உள்ளது. இ-பைலிங் முறையில் குறிப்பிட்ட விலாசத்தில் வழக்கறிஞர்கள் தங்கள் வழக்குகளைப் பதிவு செய்து அனுப்பலாம். இதில் ஏதாவது சந்தேகம் ஏற்பட்டால், உயர் நீதிமன்ற இணையதளம் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.

 It's no longer an e-billing system! Video footage is an investigation! Supreme Court Registrar Announced!

Advertisment

இ-ஃபைலிங் முறையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதும், நீதிபதிகள் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக வழக்குகளை வீட்டிலிருந்து விசாரிப்பார்கள். மனுதாரர் வக்கீலும், அரசுதரப்பு வக்கீலும், அவரவர் இல்லத்திலிருந்து வாதாடலாம். இந்தக் காணொளிகாட்சி விசாரணைக்குப் பிறகு, நீதிபதிகள் தங்களது உத்தரவை பிறப்பிப்பார்கள். இது உயர் நீதிமன்ற இணையதளத்தில் வெளியிடப்படும். ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் இந்த முறை கையாளப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.’ என குறிப்பிட்டுள்ளார்.