Advertisment

''அதன் உள்ளடக்கம் தமிழர்களுக்குத் தெரியக்கூடாது எனத் திட்டமிட்டுள்ளனர்'' - வைகோ கண்டனம்!

 '' Its contents are planned not to be known to Tamils ​​'' - Vaiko condemned

இந்திய அரசு, நாட்டில் கல்வியைமேம்படுத்துவதாகப் புதிய கல்விக் கொள்கையைக் கொண்டுவந்து, அதனை அமல்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. இந்தநிலையில், புதிய கல்விக் கொள்கை அனைவருக்கும் சென்று சேரும் வகையில், மத்திய அரசு அதனைப் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது.

Advertisment

அசாமி, மராத்தி உள்ளிட்ட இந்தியாவின் 17 மொழிகளில்புதிய கல்விக் கொள்கையின் மொழிபெயர்ப்பு வெளியாகியுள்ளது. இதில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழியை அவ்வப்போது பிரதமர் மோடி புகழ்ந்து வரும் நிலையில், புதிய கல்விக் கொள்கை மொழிபெயர்ப்பில் தமிழ் புறக்கணிக்கப்பட்டிருப்பதுஅதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

இதற்கு மதிமுகபொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். ''புதியகல்விக் கொள்கையின் உள்ளடக்கம் தமிழர்களுக்குத் தெரியக்கூடாது எனத் திட்டமிட்டு, புதிய கல்விக் கொள்கைக்கான தமிழ் மொழிபெயர்ப்பை வெளியிடவில்லை. புதியகல்விக் கொள்கை தமிழருக்கு எதிரானதுஎன்பதால் திரவிடஇயக்கங்கள் எதிர்க்கின்றன'' என வைகோ கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

NEW EDUCATION POLICY mdmk vaiko
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe