'' It's been a week since I took office ... Wait, '' - Chennai mayor interview!

தமிழக முன்னாள் முதல்வர் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் சென்னை தரமணியில் வரும்முன் காப்போம் முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சென்னை மேயர் பிரியா கலந்துகொண்டார்.

Advertisment

இந்த நிகழ்வில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய மேயர் ஆர்.பிரியா, "வரும்முன் காப்போம் திட்ட முகாம் மூன்றாவது முறையாக இன்று நடைபெற்று வருகிறது. முதலாவதாக முதல்வரின் தொகுதியான கொளத்தூரில் இந்த முகாம் நடைபெற்றது. அதனையடுத்து சோளிங்கநல்லூரில் ஒரு முகாம் நடைபெற்றது. இங்கு எல்லா வகையான மருத்துவ வசதி, இலவச ஆலோசனை நடைபெறுகிறது. மக்கள் இதை உபயோகப்படுத்திக்கொள்ளலாம். எல்லா வகையான மருத்துவர்களும் இங்கு உள்ளனர்'' என்றார்.

Advertisment

அப்பொழுது குறுக்கிட்ட செய்தியாளர்கள் 'மேயராக பொறுப்பேற்றுள்ளீர்கள் சென்னை மாநகராட்சிக்கு என்னென்ன திட்டங்கள் உள்ளன?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த மேயர், ''பதவியேற்று ஒன் வீக்தான் ஆகிறது. இன்னும் டைம் எடுக்கும் அதுக்கெல்லாம். வெய்ட் பண்ணிப்பாருங்க. தொடர்ந்து திட்டங்கள் தொடர்பான தகவலை கொடுப்பேன்'' என்றார்.