Advertisment

சென்னையை சேர்ந்த நிறுவனத்திடம் ரூபாய் 200 கோடி மோசடி- மூன்று பேர் கைது!

itnl company rs 200 crores investment police arrested

Advertisment

மும்பையைச் சேர்ந்த ஐடிஎன்எல் நிறுவனம் (ITNL) ரூபாய் 200 கோடி மோசடி செய்ததாக சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் காவல்துறையிடம் புகார் அளித்தது. அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், மும்பையைச் சேர்ந்த ஐடிஎன்எல் நிறுவனம் ரூபாய் 200 கோடி மோசடி செய்த புகாரில் முன்னாள் நிர்வாக இயக்குநர் ரவி பார்த்தசாரதி, அவரது கூட்டாளிகள் அரிசங்கரன், ராம்சந்த் கருணாகரன் உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்தனர்.

மேலும், ஐடிஎன்எல் நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டவர்கள் dsp3eowhqrs@gmail.com என்ற மின்னஞ்சலில் புகார் அளிக்கலாம். டி.எஸ்.பி. பிரகாஷ் பாபு- 95511- 33229, 94981- 09600 என்ற எண்களிலும் புகார் அளிக்கலாம் என காவல்துறை தெரிவித்துள்ளது.

arrested Chennai Police
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe