Advertisment

ஐ.டி.ஐ. பயிற்சியாளர் சேர்க்கைக்கு விண்ணப்பம்!

ITI Application for Coach Admission

தமிழகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் 102 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் 305 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் தற்போது 2024 - 25 ஆம் கல்வியாண்டிற்கான பயிற்சியாளர் சேர்க்கை நடைபெற உள்ளது.

Advertisment

இந்த தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற 8 ஆம் வகுப்பு அல்லது 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பங்களை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் நாளை (10.05.2024) முதல் விண்ணப்பிக்கலாம். இதற்கான கடைசி தேதி ஜூன் 7 ஆம் தேதி (07.06.2024) ஆகும்.

Advertisment

இணையதளத்தில் பதிவு செய்ய வசதி இல்லாத மாணவர்கள், தமிழகம் முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 136 உதவி மையங்கள் மூலமாக சேர்க்கை பதிவை மேற்கொள்ளலாம் என்று தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. இம்மையங்களின் பட்டியல் மற்றும் தொலைபேசி விவரம் மேற்கண்ட இணையதள முகவரியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தொழிற்பயிற்சி நிலைய சேர்க்கைகான விண்ணப்பித்தினை பூர்த்தி செய்வதில் ஏதேனும் ஐயம் ஏற்படும் போது itiadmission2024@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும், 9499055689 என்ற அலைபேசி மற்றும் வாட்ஸ்அப் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.

admission iti
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe