Advertisment

காவல்துறை மோசம் என சொல்வது தவறு: தூத்துக்குடிக்கு செல்வதில் தயக்கமில்லை: பொள்ளாச்சி  ஜெயராமன்

Pollachi Jayaraman

Advertisment

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

Advertisment

இந்தியா போன்ற பெரிய நாட்டில் எங்கோ ஒரு பகுதியில் ஏதோ ஒரு சம்பவம் நடந்துகொண்டு தான் இருக்கும், சம்பவம் நடைபெறாமல் இருக்காது, அது போல தான் இதுவும் என தெரிவித்தார் துணைசபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்,

அப்போது பேசிய அவர், இன்று சபாநாயகர் அலுவலகத்தில் நடைபெற்ற அலுவல் ஆய்வு கூட்டத்தில் கலந்துகொண்ட ஸ்டாலின் திடீரென கூட்டதை விட்டு வெளியே சென்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டார். எதிர்கட்சி தலைவராக செயல்படுவதை எடுத்துக்காட்டவே இவ்வாறு ஸ்டாலின் செய்துள்ளார். இதுபோன்ற நிகழ்வுகளை ஸ்டாலின் கைவிட வேண்டும். தூத்துக்குடியில் தமிழக காவல் துறை சிறப்பாக செயல்படுகின்றனர். எனவே துணை இராணுவத்தை அழைக்க வேண்டிய தேவையில்லை.

style="display:inline-block;"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9546799378">

மக்களை துன்புறுத்தும் எண்ணம் அதிமுகவிற்கு கிடையாது. போராட்டத்தை சிலர் தூண்டி விடுகிறார்கள். 200, 300 ஓட்டு கூட இல்லாதவர்கள், டெபாசிட் வாங்காதவர் தங்கள் இருப்பை காட்டிக்கொள்ள மக்களை தூண்டிவிடுகிறார்கள்.

துப்பாக்கு சூடு சம்பவம் மனவேதனை அளிக்கும் அதே வேளையில்போராட்டகார்ர்கள் என்ன செயலில் ஈடுபட்டார்கள், காவலர்கள் ஏன் செய்தார்கள் என்பது ஒரு நபர் விசாரணை முடிவில் தான் தெரியும். பொத்தம் பொதுவாக காவல்துறை மோசம் என சொல்வது தவறு. தமிழக அரசின் கட்டுப்பாட்டில்தான் காவல்துறை இருக்கிறது. காவல்துறையை யாரும் மட்டம் தட்டக்கூடாது.

ஸ்டெர்லைட் ஆலைக்கான அனுமதி கொடுத்தது திமுக. இந்த பிரச்சினைக்கு மொத்த காரணம் திமுகதான். அமைச்சர்கள் நிச்சயம் தூத்துக்குடி செல்வார்கள்,செல்வதில் தயக்கமில்லை.

அரசியல் கட்சிகள் நாங்கள் இருப்பதை காட்டிகொள்ள போராடுகிறார்கள். தூத்துக்குடி மக்களை சாந்தப் படுத்தும் கடமை தங்களுக்கு உண்டு, எனவே மக்களை சாந்தப்படுத்துவோம், கைவிட மாட்டோம். தேவையில்லாத வதந்தியை பரப்ப கூடாது என்பதற்காக இணைய சேவையை தடுத்துள்ளோம். தூத்துக்குடி மக்களுக்கு இப்போது கசப்புணர்வு இருந்தாலும், விரைவில் தாயின் மடியில் கண்டிப்பாக அமர்வார்கள்.

முதல்வரின் ஓராண்டு ஆட்சியில், இப்போது தான் இது போன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது. இந்தியா போன்ற பெரிய நாட்டில் எங்கோ ஒரு பகுதியில் ஏதோ ஒரு சம்பவம் நடந்துகொண்டு தான் இருக்கும், சம்பவம் நடைபெறாமல் இருக்காது, அது போல தான் இதுவும் என தெரிவித்தார்.

bad police Pollachi Jayaraman Sterlite wrong
இதையும் படியுங்கள்
Subscribe