]

இன்று சட்டப்பேரவையில் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் அமைக்கப்பட்ட தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான ஆணையத்தின் விசாரணை அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

Advertisment

அந்த அறிக்கையில் பல முக்கிய தகவல்களைத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக " ஸ்டெர்லைட் கலவரத்தைக் கட்டுப்படுத்த காவல்துறை உயர் அதிகாரிகள் தவறிவிட்டனர். ஓடிக்கொண்டிருந்தவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. போராட்டக்காரர்களில் சிலர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் சுட்டுக் கொல்லப்பட்டனர். துப்பாக்கிச்சூட்டுக்கு முன் எவ்வித எச்சரிக்கையும் விடப்படவில்லை. அப்போதைய காவல்துறைத் தலைவர் சைலேஷ்குமார் மாவட்ட ஆட்சியர் வளாகத்திற்குள்ளேயே இருந்திருந்தும், அப்போதைய காவல்துறை துணைத் தலைவர் அவராகவே அதிகாரத்தைக் கையிலெடுத்து, துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்" என அறிக்கையில் கூறியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

மேலும் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை ஊடகத்தை பார்த்து தெரிந்து கொண்டேன் என எடப்பாடி பழனிசாமி கூறுவது தவறு. இதுதொடர்பாக அவருக்கு டிஜிபி, உளவுத்துறை தலைவர் ஆகியோர் அவருக்கு முன்பே தகவல் தெரிவித்தனர் என அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளார்.