Skip to main content

''தமிழ்நாட்டில் யோகி ஆட்சி வந்தால் சிறப்பாக இருந்திருக்கும்'' - அண்ணாமலை பேட்டி

Published on 22/08/2023 | Edited on 22/08/2023

 

 "It would have been better if Yogi came to power in Tamil Nadu" - Annamalai interview

 

ஜெயிலர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் இமயமலை சென்றிருந்தார். நான்கு நாட்கள் இமயமலையில் தியானம் செய்த அவர் பல்வேறு அரசியல்  பிரமுகர்களையும் சந்தித்திருந்தார். இந்த நிலையில் சென்னை திரும்பிய ரஜினிகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ''ஜெயிலர் திரைப்படத்தை வெற்றிப் படமாக்கிய படக்குழுவினர் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி. ஜெயிலர் படத்தின் வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்'' என்றார்.

 

மேலும் 'யோகி ஆதித்யநாத் காலில் விழுந்தது தொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர் ''ஒரு சன்னியாசி ஆகட்டும்; ஒரு யோகி ஆகட்டும், அவர்கள் வயதில் நம்மை விட சிறியவர்களாக இருந்தால் கூட அவர்களுடைய காலில் விழுவது என்னுடைய பழக்கம். நான் அதைத்தான் செய்திருக்கிறேன்'' என்று கூறியிருந்தார்.

 

 "It would have been better if Yogi came to power in Tamil Nadu" - Annamalai interview

 

இந்நிலையில் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் ரஜினிகாந்த்தின் இந்த பதில் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அண்ணாமலை, ''ரஜினிகாந்த் யோகி காலில் விழுந்ததில் என்ன தவறு இருக்கிறது. ஒரு மனிதன் உன்னை மதிக்கின்றேன் உன்னுடைய ஆன்மீகத்தை நான் போற்றுகின்றேன் என்று சொல்ல வருவதை போன்றதுதான் இது. ரஜினி யோகியின் காலைத் தொட்டு வணங்கி அவருடைய அன்பை வெளிப்படுத்தினார். இதற்கு ரஜினி சாரே விளக்கம் கொடுத்துள்ளார். இதில் வேலையில்லாத சில கட்சிகள், சில வேலை இல்லாதவர்கள் தொட்டதெல்லாம் குற்றம் என பேச ஆரம்பித்தால் அதற்கு முடிவுதான் என்ன. அன்பின் மகேஷ் காலில் விழுந்து விட்டு ஒருவர் பத்து ரூபாய் வாங்குகிறார். நீங்க அந்த வீடியோ பார்த்திருப்பீர்கள். அது என்ன? அது மரியாதையில்லை கொத்தடிமை. திமுக தலைவர் ஸ்டாலின் காலில் அமைச்சர்கள் விழுந்து மரியாதை வாங்குகிறார்கள். உதயநிதியை விட 40 வயது மூத்த எம்.எல்.ஏ இடுப்பே உடையும் அளவிற்கு வளைகிறார். இதைப் பற்றி எல்லாம் திருமாவளவன் பேச மாட்டாரா? முற்றும் துறந்து ஆன்மீகத்திற்காகச் சேவையாற்றிக் கொண்டிருக்கும் யோகி ஆதித்யநாத்  காலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விழுந்தது எந்த விதத்தில் தவறு'' என்றார்.

 

'ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்து முதல்வராகியிருந்தால் தமிழ்நாட்டில் யோகி ஆட்சி நடந்திருக்கும் என திருமாவளவன் கூறியுள்ளாரே' என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, ''இங்க யோகி ஆட்சி நடந்தால் என்ன தவறு. பெண்களுக்கு பாதுகாப்பு இருந்திருக்கும். இந்த மாதிரி ரோட்டில் போகும் பெண்கள் எல்லாம் பயந்து பயந்து போக மாட்டாங்க. வெடிகுண்டு கலாச்சாரம் வந்திருக்காது. ஜாதி மோதல் வந்திருக்காது. இடுப்பை பிடித்து யாரும் கில்லி இருக்க மாட்டார்கள். உண்மைதான் யோகி ஆட்சி வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். சிறப்பாக இருந்திருக்கும்'' என்றார்.

 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

மிக்ஜாம் புயல் பாதிப்பு - பிரதமர் மோடி ஆறுதல்

Published on 06/12/2023 | Edited on 06/12/2023

 

 Migjam storm damage- Prime Minister Modi consoles

 

மிக்ஜாம் புயல் காரணமாக மூன்றாவது நாளாக பெய்த மழைநீர் இன்றும் சென்னையில் சில இடங்களில் தேங்கி நிற்கிறது. குறிப்பாக அசோக் நகர், அரும்பாக்கம், வேளச்சேரி, பெருங்குடி, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் தேங்கியுள்ள நீரை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பல இடங்களில் பால் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மீட்புப் படையினர் 450 பேர் 18 குழுக்களாக பிரிந்து பல்வேறு இடங்களில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

இந்நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட தமிழ்நாடு மற்றும் ஆந்திர மக்களுக்கு பிரதமர் மோடி ஆறுதல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், 'மிக்ஜாம் சூறாவளியால், குறிப்பாக தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் புதுச்சேரியில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்கள். இந்தப் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ பேரிடர் மீட்புப்படையினர் அயராது உழைத்து வருகின்றனர். நிலைமை முழுமையாக சீராகும் வரை தங்கள் பணி தொடரும்' என தெரிவித்துள்ளார்.

 

ஏற்கனவே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இடைக்கால நிவாரணமாக 5060 கோடி ரூபாய் நிதி கேட்டு பிரதமர் கடித்தும் எழுதியுள்ளதும், 'புயல் பாதிப்புகளில் இருந்து இன்னும் சென்னை மீளாத நிலையில், ஒன்றிய அரசின் உயர்கல்வித்துறை நடத்தும் யூஜிசி - நெட் தேர்வுகள் பல மையங்களில் நடக்கிறது. தேர்வு தேதியை மாற்றி சென்னை மாணவர்களுக்கு நியாயம் வழங்குங்கள்' என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடசன் வலியுறுத்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

“தேர்தலில் நத்தம் தொகுதியில் மட்டும் 2 லட்சம் ஓட்டுகள் வாங்க வேண்டும்” - அமைச்சர் சக்கரபாணி 

Published on 06/12/2023 | Edited on 06/12/2023

 

2 lakh votes should be bought Natham constituency alone elections says Minister sakkarapani

 

அடுத்தாண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் திமுக அரசு செயல்படுத்திய மக்கள் நலத் திட்டங்களை எடுத்துக் கூறி வாக்கு சேகரிக்க வேண்டும் என்று அமைச்சர் சக்கரபாணி கூறினார்.

 

திண்டுக்கல் மேற்கு மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதி திமுக சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கூட்டம் சாணார்பட்டியில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் ராஜாமணி வரவேற்றார். எம்.பி.வேலுச்சாமி, முன்னாள் எம்எல்ஏ ஆண்டியம்பலம், மேற்கு மாவட்ட பொருளாளர் விஜயன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். 

 

கூட்டத்திற்கு திண்டுக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளரும் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசும்போது, “கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட வேலுச்சாமி சுமார் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்தார். குறிப்பாக நத்தம் சட்ட மன்ற தொகுதியில் மட்டும் ஒரு லட்சத்து ஐயாயிரம் வாக்குகள் அதிகமாக பெற்றிருந்தார். இதற்கு நீங்கள் தான் காரணம். கடந்த முறை நாம் எதிர்க் கட்சியாக இருந்தோம். ஆனால் தற்போது ஆளுங்கட்சியாக இருக்கிறோம். தமிழ்நாடு முதல்வர் கடந்த 30 மாதங்களில் செயல்படுத்திய கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, கட்டணமில்லா டவுன்பஸ், பள்ளிகளில் காலை உணவு திட்டம், 2 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு, புதுமைப் பெண் திட்டம், நான் முதல்வர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை வீடு வீடாக சென்று எடுத்துக் கூறி வருகிற பாராளுமன்றத்தில் வாக்காளர் மக்களிடம் வாக்கு சேகரிக்க வேண்டும். 

 

நத்தம் சட்டமன்ற தொகுதியை பொருத்தவரை அரசு கல்லூரி, புதிய காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம், அமராவதி, காவேரி, ஆற்றின் உபரி நீர்மூலம் குளங்களை நிரப்பும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது. அதனால் வருகிற பாராளுமன்ற தேர்தலில் நத்தம்  சட்டமன்ற தொகுதியில் உள்ள 2 லட்சத்து 80 ஆயிரம் வாக்குகளில் 2 லட்சம் வாக்குகள் திமுக பெற வேண்டும். இதற்கான பணியை உடனடியாக நீங்கள் தொடர வேண்டும்” என்று கூறினார்.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்