ஐ.டி பெண் ஊழியர் கொலையில் அடுக்கடுக்கான அதிர்ச்சி தகவல்கள்

IT woman employee's case incident; Layered shock information

செங்கல்பட்டில் ஐடி பெண் ஊழியர் ஒருவர் கை கால்கள் கட்டப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இளைஞர் திருநம்பி என தெரியவந்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் நாவலூர் அடுத்துள்ள பகுதி பொன்மார். அங்குள்ள வேதகிரி நகரில் இளம்பெண் ஒருவர் கொடூரமாக எரிக்கப்பட்ட நிலையில் கிடப்பதாக தாழம்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த பெண்ணை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பெண்ணை சோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். அங்கிருந்து அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த பெண் மதுரையை சேர்ந்தவர் என்பது தெரிந்தது.

காதல் விவகாரத்தில் பெண் இறந்திருக்கலாம் என என்ற கோணத்தில் போலீசார் விசாரணையைத் தொடர்ந்திருக்கும் நிலையில் வெற்றிமாறன் என்ற நபரை முதற்கட்டமாக கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். போலீசார் நடத்திய தொடர் விசாரணையில் வெற்றிமாறன் திருநம்பி என தெரியவந்துள்ளது. அவரது இயற்பெயர் பாண்டி மகேஸ்வரி என்பதும் தெரியவந்துள்ளது.

எட்டு மாதத்திற்கு முன்பு மதுரையிலிருந்து சென்னை வந்த அப்பெண் பெருங்குடியில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அதேபோல வெற்றிமாறன் என்ற திருநம்பிக்கும் அப்பெண்ணிற்கு படிக்கும் போதேஇருவருக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. சென்னையிலும் நட்பாக பழகி வந்துள்ளனர். அவர் திருநம்பி என்பதால் அவரை அப்பெண் உதாசீனம் செய்ததாக தெரியவந்துள்ளது.

பிறந்தநாள் பரிசு கொடுக்க இருப்பதாக திருநம்பி அப்பெண்ணை இருசக்கர வாகனத்தில் பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்றுள்ளார். பிறகு புதர் பகுதிக்குச் அழைத்துச் சென்ற வெற்றிமாறன் கை, கால்களை சங்கிலியால் கட்டி பூட்டிய பிறகு கண்களைக் கட்டி அவரின் கழுத்தை அறுத்துவிட்டு பெட்ரோல் ஊற்றி கொடூரமாக எரித்துள்ளார்.

சாலை ஓரத்திலேயே இருந்த புதர் பகுதியில் இருந்து சத்தம் வருவதை பார்த்த வாகன ஓட்டிகள் இருவர் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் பிறகு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அங்குவந்து எரிந்த நிலையில் இருந்த பெண் மீது துண்டை போர்த்தி 108 ஆம்புலன்ஸ்க்கு தூக்கி சென்றனர். அப்பொழுது அப்பெண் மரணத்தின் தருவாயில் ஒரு தொடர்பு எண்ணை கொடுத்துள்ளார். அந்த தொடர்பு எண்ணை வைத்து விசாரணை செய்ததில் வெற்றிமாறன் என்ற பாண்டி மகேஸ்வரி இந்த கொலையைசெய்தது போலீசாருக்கு தெரியவந்து கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை புறநகர் பகுதியில் நடந்த இந்தகொடூரக்கொலை சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chengalpattu Investigation police
இதையும் படியுங்கள்
Subscribe