jkl

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துவருகிறது. கடந்த ஐந்து தினங்களாக தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்துவருகிறது. சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்குகிறது. இதனால் சென்னையில் பல இடங்களில் தண்ணீர் தேங்கி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. அதிகாரிகளும் அமைச்சர்களும் களத்தில் இறங்கி வேலை பார்த்துவருகிறார்கள். இந்நிலையில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கடலூர், மயிலாடுதுறை, நாகை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர்உள்ளிட்ட மாவட்டங்களில் சில மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisment