அது வாட்ஸ்அப் அவதூறு... மறுக்கும் திமுக விஐபி

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகரின் அய்யாத்துரை பாண்டியன். கல்வி நிறுவனங்கள், ஹோட்டல் மற்றும் லாட்ஜ்களைக் கொண்ட தொழிலதிபரான முக்கிய வி.ஐ.பி. அண்மையில் தான் ஸ்டாலின் முன்னிலையில் தன் ஆதரவாளர்களுடன் தி.மு.க.வில் இணைந்தவர் அய்யாத்துரை பாண்டியன். பின் மாநில வர்த்தக அணி துணைத் தலைவர் பொறுப்பைப் பெற்று மாவட்ட அரசியலில் பரபரப்பான புள்ளியானார்.

 It is a WhatsApp slander ... denying DMK VIP

கடந்த வாரம் தென்காசி புதிய மாவட்டத்தினைத் திறந்து வைத்ததில் இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்., உள்ளிட்ட சக அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டனர். அதையடுத்து மூன்று நாட்களுக்குப் பின்பு, அய்யாத்துரை பாண்டியன் ஓ.பி.எஸ்.சுக்கு பூங்கொத்துக் கொடுக்க, அருகில் அ.தி.மு.க., மா.செ.தச்சை கணேசராஜா நிற்கிற படம் ஒன்று, வாட்ஸ்அப்பில் பரவி வைரலானது. அத்துடன், தி.மு.க. புள்ளியான நீங்கள், தச்சை கணேசராஜா மூலம் ஓ.பி.எஸ்.சைச் சந்தித்தது உண்மையா என்ற வாசகங்கள் வந்தது மேற்கு மாவட்ட தி.மு.க. அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு சூட்டைக் கிளப்பியது. பலவாறான பேச்சுக்கள் றெக்கை கட்டின.

 It is a WhatsApp slander ... denying DMK VIP

நாம் மே.மா.செ. சிவபத்மநாபனைத் தொடர்பு கொண்டு பேசியதில், அது, அவர் தி.மு.க.விற்கு வருவதற்கு முன்பான பழைய படம். அவரைப் பிடிக்காதவர்கள் அந்தப் படத்தை தற்போது வாட்ஸ்அப்பில் போட்டு அவதூறு பரப்புகிறார்கள். தற்போது அது போன்றதொரு சம்பவம் நடக்கவில்லை என்கிறார்.

இதுகுறித்து அய்யாதுரை பாண்டியனின் உதவியாளரிடம் கேட்டதில்,

 It is a WhatsApp slander ... denying DMK VIP

அவர் தி.மு.க.வில் சேர்வதற்கு முன்பாக கடந்த 2018ல் நாகர்கோவிலில் நடந்த, எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நிகழ்சியின் போது வந்த ஓ.பி.எஸ்சை மரியாதை நிமித்தம் சந்தித்த போது எடுத்த பழைய படம். அதைத் தற்போது வாட்ஸ்அப்பில் வெளியிட்டு அவதூறு பரப்புகிறார்கள். குறிப்பிட்டது போன்றது நடக்கவில்லை. அன்றைய தினம் தென்காசியில் தி.மு.க.வின் தென்காசி எம்.பி. அலுவலகம் திறப்பு விழாவில் கலந்து கொண்ட அய்யாத்துரை பாண்டியன், மாலையில் தன் சொந்த செலவில் கடையநல்லூரில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் நிகிழ்ச்சியாகப் பலபேர்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கியுள்ளார். என்கிறார்.

வாட்ஸ்அப் வீச்சுக்கு எல்லை இல்லை போலும்.

ops stalin
இதையும் படியுங்கள்
Subscribe