'It should be completed by the next Gurupuja' - Pugahendi demanded

ராமநாதபுரத்தில் முத்துராமலிங்க தேவர் குருபூஜையை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் மரியாதை செலுத்தினர். அதன்படி பசும்பொன்னில் அவரது திருவுருவ சிலைக்கு வீரவணக்கம் செலுத்திய கழக ஒருங்கிணைப்புக் குழுவைச் சார்ந்த வா.புகழேந்தி பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

Advertisment

பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தைக் காண்பித்து அவர் பேசியதாவது, 'நீண்ட நாட்கள் கோரிக்கையாக பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பெயரை மதுரை விமான நிலையத்திற்கு சூட்ட வேண்டும் என்ற கோரிக்கை நிலுவையில் உள்ளது. இந்திய மக்கள் குறிப்பாக தென்தமிழக மக்கள் கடவுளாக நினைத்து போற்றி புகழக்கூடிய முத்துராமலிங்க தேவர் வரலாற்றில் இடம்பெற்றவர். பல போராட்டங்களை கண்டவர். மக்களின் உரிமைகளுக்காக போராடியவர். சுதந்திரப் போராட்ட தியாகி வீரர் நேதாஜியின் சீடராக விளங்கிய அவர் சட்டமன்றத்திற்கும் நாடாளுமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். சுதந்திரப் போராட்ட தியாகி என பல பதவிகளை வகித்தவர். தனது சொத்துக்களை விற்று தாழ்த்தப்பட்ட மக்களுக்காக கொடுத்து அழகு பார்த்தவர்.

Advertisment

இப்படிப்பட்ட தலைவரின் பெயரை மதுரை விமான நிலையத்திற்கு சூட்டாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. நான் இங்கே எச்சரிக்க வரவில்லை உடனடியாக தேவர் பெயரை விமான நிலையத்திற்கு சூட்ட வேண்டும். இல்லையேல் மத்திய அரசு மக்களுடைய எதிர்ப்புக் குரலுக்கு உள்ளாகும். வெறுப்பிற்கு ஆளாகும். ஆகவே உடனடியாக இதனை நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கை. அடுத்த பிறந்தநாள் காண்பதற்குள் உடனடியாக மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் தேவர் பெயர் சூட்டப்படும் என்று நம்புகிறோம். தமிழக முதல்வர் ஸ்டாலினும் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்து மதுரை விமான நிலையத்திற்கு தேவர் பெயர் சூட்ட முயற்சி மேற்கொள்ள வேண்டும்'' என்றார். உடன் கஜேந்திரன், ஆனந்த் உள்ளிட்ட பல நூற்றுக்கணக்கானோர் உடன் இருந்தனர்.