Advertisment

'மனு கொடுக்கப் போவோர் லிப்ஸ்டிக் போடக்கூடாது போலிருக்கிறது'-ஜெயக்குமார் பேட்டி

admk

'மேயரிடம் மனு கொடுக்கப் போவோர் லிப்ஸ்டிக் போடக்கூடாது போலிருக்கிறது, அந்த அளவிற்கு சென்னை மாநகராட்சியில் லிப்ஸ்டிக்கால் பிரச்சனை வந்துள்ளது' எனமுன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Advertisment

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், ''சென்னை மாநகரத்தில் பல்வேறு பிரச்சனைகள் இருக்கிறது. சாலைகள் குண்டும் குழியுமாக இருக்கிறது. ஒருபக்கம் ஒருநாள் மழைக்கு பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. மழைநீர் போவதற்கான வாய்க்கால்கள் இணைக்கப்படவில்லை, தூர்வாரப்படவில்லை. சாலைகளில் உள்ள பள்ளங்களால் நிறைய விபத்துகள் நடைபெறுகிறது. குறிப்பாக சமீபத்தில் கோயம்பேட்டில் ஒரு பெண்மணி குண்டும் குழியுமானசாலையில் வாகனத்தில் இருந்து கீழே விழுந்து தூக்கி வீசப்பட்டு பெரிய வாகனத்தில் சிக்கி இறந்ததெல்லாம் மனம் பெரும் வேதனைப் படக்கூடிய விஷயம். ஆனால் இதையெல்லாம் இப்போது இருக்கின்ற சென்னை மாநகராட்சி நிர்வாகம் குறிப்பாக மேயர், துணை மேயரோ கண்டு கொள்வதில்லை. சென்னை மாநகரம் எப்படி சீரழிந்தால் என்ன? கொசுத் தொல்லை அதிகமாக இருக்கிறது. 13000 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஆறு பேரும் மரணம் அடைந்துள்ளார்கள். கொசுவை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம் கூட இல்லாமல் மாநகராட்சியில் ஒரு ஈகோ பிரச்சனை மேயருக்கும் துணை மேயருக்கும் இடையே ஈகோ பிரச்சனை. கமிஷன் வாங்குவதில் ஈகோ பிரச்சனையால் பெரிய அளவில் உள்குத்து நடந்து கொண்டிருக்கிறது.

Advertisment

ஒருவரை ஒருவர் முதுகில் குத்தும் வேலையால் சென்னைமாநகராட்சி ஸ்தம்பித்துள்ளது. அதிலும் ஒன்றாக லிப்ஸ்டிக் பிரச்சனை வந்துள்ளது. மேயரிடம் மனு கொடுக்கப் போவோர் லிஸ்டிக் போடக்கூடாது போலிருக்கிறது, அந்த அளவிற்கு லிப்ஸ்டிக்கால் பிரச்சனை வந்துள்ளது. வஞ்சிக்கோட்டை வாலிபன் படம் பார்த்திருப்பீர்கள் அதில் 'இன்னொருத்தி நிகராகுமா... எனக்கு இன்னொருத்தி நிகராகுமோ என்ற பாடலுக்கு நடனமாடுவார்கள். அதைப் போல நீ எனக்கு நிகரா என்ற அளவுக்கு சென்னை மாநகராட்சியில் லிப்ஸ்டிக் கூட பெரிய பிரச்சனையாக உள்ளது'' என்றார்.

jayakumar admk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe