Advertisment

''தமிழகத்தில் எய்ம்ஸ் அமைக்க மத்திய அரசுக்கு ஆர்வமில்லை என்றே தெரிகிறது'' - உயர்நீதிமன்றம் வருத்தம்!

 '' It seems that the Central Government is not interested in setting up AIIMS in Tamil Nadu '' - High Court regrets!

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க, மத்திய அரசுக்குஆர்வம் இல்லை என்றேதெரிகிறது என்று உயர்நீதிமன்றகிளை கருத்துத் தெரிவித்துள்ளது.

Advertisment

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கநிதியைஒதுக்கி,கட்டுமானப்பணியைத் துரிதப்படுத்தஉத்தரவிடக்கோரி ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இரண்டு மாதமாக இந்த வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில்நிலம் கையகப்படுத்துவதில் சிலபிரச்சனைகள் இருப்பதால் காலதாமதம் ஏற்படுவதாக அரசுத் தரப்பில் விளக்கம் தரப்பட்டது. மேலும், இன்று இந்த வழக்கில்அரசுத் தரப்பில் கூடுதல்வழக்கறிஞர் ஆஜராகஅவகாசம் கோரியதைஅடுத்து, வழக்கு சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது.

Advertisment

எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பான வழக்கில், இரண்டு மாதங்கள் ஆகியும்முறையாகப் பதில் அளிக்காதது வருத்தம் தருகிறது. இதிலிருந்து தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கமத்திய அரசுக்குஆர்வம் இல்லை என்றேதெரிகிறது. இதேநிலைதொடர்ந்தால் சுகாதாரத்துறை செயலர்உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆஜராகநேரிடும் எனஎச்சரித்த நீதிபதிகள்,வழக்கைசிறிது நேரம் ஒத்திவைத்தனர்.

TNGovernment Central Government AIMS HOSPITAL highcourt
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe