IT search at DMK executive Meena Jayakumar's house

தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்ற நிலையில், திமுக நிர்வாகி மீனா ஜெயக்குமார் வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது.

Advertisment

திருவண்ணாமலையில் உள்ள அமைச்சர்எ.வ. வேலுக்கு சொந்தமான கல்வி நிறுவனங்கள் மற்றும் வீடுகளிலும் வருமான வரித்துறை சோதனையானது நடைபெற்று வருகிறது. காலை முதலே நடந்துவரும் இந்தச் சோதனையானது, ஏற்கனவே அமைச்சர் எ.வ.வேலு மீது இருக்கும் சொத்துக்குவிப்பு வழக்கின் காரணமாக நடத்தப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

இந்நிலையில் கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள பார்சன் குடியிருப்பு வளாகத்தில் உள்ள திமுகவின் கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை நிர்வாகி மீனா ஜெயக்குமாரின் வீட்டில்வருமான வரித்துறைசோதனையானது நடைபெற்று வருகிறது. அதேபோல் அவருடைய சகோதரர் ஒருவர் வீட்டிலும்சோதனையானது நடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.