Advertisment

மருத்துவ படிப்பில் கருணை மதிப்பெண்கள் வழங்குவது அபத்தமானது - 19 மாணவர்கள் வழக்கில் நீதிபதி உத்தரவு

dr

புதுச்சேரி மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனத்தில் மருத்துவம் படிக்கும் 19 மாணவர்கள் தேர்வில் தவறிய தங்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கி, படிப்பை முடிக்க அனுமதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

Advertisment

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், கருணை மதிப்பெண்களை உரிமையாக கோர முடியாது என்றும், அதுகுறித்து பல்கலைக்கழகம் முடிவு செய்ய மருத்துவ கவுன்சிலுக்கு அதிகாரம் வழங்கியிருப்பதாகவும் கூறி, வழக்கை முடித்து வைத்தார்.

Advertisment

மேலும், மருத்துவ படிப்பில் கருணை மதிப்பெண்கள் வழங்குவது அபத்தமானது என கருத்து தெரிவித்த நீதிபதி, கருணை மதிப்பெண்கள் வழங்குவதை ரத்து செய்து விதிகளில் திருத்தம் கொண்டு வர வண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

மருத்துவமனைகள் மற்றும் மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைச் சுட்டிக்காட்டிய நீதிபதி, உண்மையான மருத்துவர்கள் யார் என்பதை கண்டறிய முடியாமல் மக்கள் திகைத்து நிற்கும் நாள் வரும் எனவும் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

கருணை மதிப்பெண்கள் பெற்று மருத்துவர்களானவர்களிடம் சிகிச்சை பெற்று தன் உயிரை பணயம் வைக்க யாரும் விரும்ப மாட்டார்கள் என்ற நீதிபதி, நாட்டு மக்களின் நலனுக்கு எதிராக, மருத்துவ மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்க நீதிமன்றங்கள் உத்தரவிடுவது அநீதியானது எனவும் நீதிபதி வைத்தியநாதன் தன் உத்தரவில் தெரிவித்துள்ளார்.

Doctor Pondicherry
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe