Advertisment

ஐஎஸ் அமைப்புகளுடன் தொடர்பா? கோவையை தொடர்ந்து மதுரையிலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை!!

மதுரையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மதுரை வில்லாபுரத்தைசேர்ந்த சகத்துல்லாஎன்பவரிடம் ரகசிய இடத்தில் வைத்து அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளது.

Advertisment

சமூகவலைதளங்களில் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு என்ற தகவலின் அடிப்படையில் என்ஐஏஅதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கோவையில் 7 இடங்களில் என்ஐஏஅதிகாரிகள் ஏற்கனவே சோதனை நடத்தி இருந்தனர். இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் 3 பேர் மீது சட்டவிரோத தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisment

madurai

இந்த நிலையில் கோவை சோதனையைத் தொடர்ந்து மதுரையிலும் என்ஐஏஅதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். நேற்றுகோவை உக்கடம், போத்தனூர், குனியமுத்தூர் உட்பட7 இடங்களில் என்ஐஏஅதிகாரிகள் 7 மணி நேரத்திற்கு மேலாக சோதனை மேற்கொண்டனர். இதில் அசாருதீன் என்பவரை கைது செய்தனர்.

தற்போது மதுரையில் வில்லாபுரம் உள்ளிட்ட மூன்று பகுதிகளில் என்ஐஏஅதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.

Investigation madurai NIA raid
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe