நடிகர் ஆர்யாவுக்கு சொந்தமான உணவகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை ஈடுபட்டுள்ளனர்.
சென்னை அண்ணா நகர் மற்றும் வேளச்சேரி ஆகிய பகுதிகளில் உள்ளநடிகர் ஆர்யாவுக்கு சொந்தமான உணவகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இன்று காலை எட்டு மணியிலிருந்து இந்த சோதனையானது நடைபெற்ற வருகிறது. வருமானத்திற்கு அதிகமாக கணக்கு காட்டாததன் அடிப்படையில் சோதனை நடைபெற்று வருவதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இருப்பினும்சோதனையின் முடிவுக்குப் பிறகே முழு தகவல் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.