தமிழகத்தில் 2021ஆம் ஆண்டு சட்டமன்றத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது.அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் நேர்காணல், வேட்புமனு தாக்கல் என அனைத்தும் முடிந்து சட்டமன்றத் தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.இது ஒருபக்கம் இருக்க, மறுபக்கம்தேர்தல்நடத்தை வழிமுறைகள் அமலில்இருப்பதால், தேர்தல் பறக்கும் படையினர்தீவிரவாகனசோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், தேனி போடியில் அதிமுகசார்பாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடும் நிலையில், அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கும் த.மா.கா கட்சியின் நகர தலைவர் அங்குவேல் என்பவரது வீட்டில் வருமான வரித்துறையினர்சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.