சென்னை அண்ணா மேம்பாலம் கீழ் கோடிக்கணக்கில் பதுக்கி வைத்திருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாலை பணி ஒப்பந்ததாரர் செய்யாதுரை சென்னை அண்ணா மேம்பாலத்தில் கோடிக்கணக்கில் பதுக்கி வைத்திருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கோடிக்கணக்கான பணத்தை அண்ணா பாலத்தின் கீழ் பதுக்கி வைத்திருந்துள்ளது, தொடர்ந்து நடந்து வரும் வருமானவரித்துறை சோதனையில் தெரிய வந்துள்ளது. அதன் அடிப்படையில், அண்ணா மேம்பாலம் கீழ் ரூ.4 கோடி அளவில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதையடுத்து, வருமானவரித்துறை வேண்டுகோளை ஏற்று நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சிசிடிவி பதிவு அடிப்படையில் கோட்டப் பொறியாளர் உள்பட 4 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
style="display:inline-block;width:336px;height:280px" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="3041061810">