Skip to main content

ஐ.டி. ரெய்டில் ரூ. 40 லட்சம் பறிமுதல்; திருப்பத்தூரில் பரபரப்பு!

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
IT Raid Rs. 40 lakh forfeited; Busy in Tiruppathur

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

அதே சமயம் திருப்பத்தூர் மாவட்டம் திருநாதர் முதலியார் என்ற பகுதியைச் சேர்ந்த நவீன் என்பவர் போட்டோ ஸ்டுடியோ, ரியல் எஸ்டேட் மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவர் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஜி. ரமேஷின் அக்காள் மருமகன் ஆவார். இத்தகைய சூழலில் தேர்தலில் வாக்களிக்க வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வது குறித்து வருமான வரித்துறையினருக்கு தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படையினர் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து நவீன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார். அப்போது ரூ. 40 லட்சம் ரொக்கம் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் தேர்தலில் வாக்களிக்க வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதற்காக பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததா என்ற கோணத்திலும் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.  வருமான வரித்துறை சோத்னையின் மூலம்  ரூ. 40 லட்சம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் திருப்பத்தூர் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சார்ந்த செய்திகள்