IT Raid on major companies in Tamil Nadu

தமிழ்நாட்டில் வருமான வரித்துறையினர் 50க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்திவருகின்றனர்.

Advertisment

வரி ஏய்ப்பு புகார் தொடர்பாகச்சென்னையில் இன்று காலை முதலே வருமான வரித்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர். தமிழ்நாட்டில் சென்னை, விழுப்புரம், காஞ்சிபுரம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் உள்ள முக்கிய நிறுவனங்களிலும், அவர்களுக்குச் சொந்தமான இடங்களிலும் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது. இதேபோன்று கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் உள்ள முக்கிய நிறுவனங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

Advertisment