Advertisment

அமைச்சரின் பினாமி? - பிரபல பைனான்ஸியர் வீட்டில் ஐ.டி ரெய்டு

IT raid at the house of a famous financiers in Trichy

தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலுக்குச் சொந்தமான இடங்களில் நான்கு நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில், ஐந்தாவது நாளாக இன்றும் மத்திய பாதுகாப்புப் படையினர் துணையுடன் சோதனையானது தொடர்ந்து வருகிறது. அதேபோல் திமுக பிரமுகர் மீனா ஜெயக்குமார் வீட்டிலும் சோதனை நடைபெற்ற நிலையில், அங்கும் சோதனையானது ஐந்தாவது நாளாகத் தொடர்ந்து வருகிறது.

Advertisment

இந்த நிலையில் திருச்சி தென்னூர் அண்ணா நகரில், கண்ணதாசன் சாலையில் உள்ள பிரபல பைனான்சியர்மணப்பாறை சாமிநாதன் என்பவரது வீட்டில்வரிமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது.தற்போது இரண்டு கார்களில் வந்த10க்கும் மேற்பட்டவருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், விசாரணைக்காக அவரது குடும்பத்தினரை காரில் அழைத்துச் சென்றுள்ளனர். இவர் அமைச்சர் எ.வ. வேலுவின் பினாமி என்று கூறப்படுகிறது. மேலும், சாமிநாதன் லட்சுமி காபித்தூள் ஏஜென்சியும் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

Advertisment

trichy
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe