ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் நடந்த ஐ.டி ரெய்டு நிறைவு

  IT raid at G Square has been completed

'ஜி ஸ்கொயர்' நிறுவனத்திற்கு சொந்தமான அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகளின்சோதனையில் பல்வேறு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட இடங்களில் ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அந்த நிறுவனம் வாங்கி இருக்கக் கூடிய இடங்களுடைய நில விவரப் பத்திரங்கள், வங்கி பரிவர்த்தனைகள் தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் 50 குழுக்களாகப்பிரிந்து சோதனையில் ஈடுபட்டனர். இதில் சில முக்கியமான ஆவணங்கள் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் கடந்த 6 நாட்களாக நடைபெற்று வந்த வருமான வரித்துறை சோதனை இன்று அதிகாலை 3 மணியளவில் நிறைவு பெற்றது. வருமான வரித்துறை வெளியிடும் அறிக்கையில்தான் என்ன என்ன ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது என்பது தெரியவரும்.

Chennai lands
இதையும் படியுங்கள்
Subscribe