Published on 07/01/2025 | Edited on 07/01/2025

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உறவினருக்கு சொந்தமான இடங்களில் இன்று (07-01-25) வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் செட்டிப்பாளையம் பகுதியில் உள்ள என்.ராமலிங்கம் என்பவரின் என்.ஆர்.கன்ஸ்டரஷன் நிறுவனத்திற்கு சொந்தமாக இருக்கக்கூடிய இடங்களில் தற்போது வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஈரோடு மட்டுமின்றி கோவை, சென்னை உள்ளிட்ட அவருக்கு சொந்தமான வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
என்.ராமலிங்கம், ஈரோடு மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் கட்டுமானங்கள் மற்றும் சாலைகள் என பிரதான திட்டங்களில் ஈடுபட்டிருக்கிறார். இவர், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் உறவினர் ஆவர்.