Advertisment

தென்காசியில் திமுக வர்த்தகர் அணி துணைத் தலைவர் அலுவகங்களில் ஐடி ரெய்டு  

Advertisment

திமுக மாநில வர்த்தகர் அணி துணைத் தலைவரின்பள்ளி மற்றும் வர்த்தக நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனைநடத்தினர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலைச் சேர்ந்த தி.மு.க. மாநில வர்த்தக அணி துணைத் தலைவர் அய்யாத்துரைப்பாண்டியனுக்கு சொந்தமான விடுதிகள், தொழில் நிறுவனங்கள், பள்ளிக்கூடங்கள் ஆகியவற்றில் சென்னையைச் சேர்ந்த வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனைநடத்தினர்.

அய்யாத்துரைப்பாண்டியனுக்கு சங்கரன்கோவில், நெல்லை, குற்றாலம் பகுதிகளில் சொகுசு விடுதிகள் பங்களாக்கள் உள்ளன.காலை 10 மணி முதல் ஐந்து பேர் கொண்ட குழு சோதனையில் ஈடுபட்டனர்.நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் சமீப காலத்தில் திமுகவில் தீவிரமாக செயல்பட்டு வரும் அய்யாதுரைப்பாண்டியனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டிருப்பது திமுகவினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

it raid thenkasi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe