Advertisment

பிரபல ஜவுளிக்கடையில் இரண்டாவது நாளாக தொடரும் ஐடி ரெய்டு

IT raid continues for second day siva textiles karur

Advertisment

கரூர் சிவா டெக்ஸ் குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறையினர்சோதனை நடத்தி வருகின்றனர்.

கரூர் மாநகரில் பிரபல ஜவுளிக்கடையான சிவா டெக்ஸ்டைல்ஸ்கடையில் நேற்று காலை முதல் வருமான வரித்துறையினர்சோதனையில் ஈடுபடத்தொடங்கினார். சோதனையானது கரூர் ஜவகர் பஜார் சிவா டெக்ஸ்டைல்ஸ்ஜவுளிக்கடை, ஜவுளி வைக்கும் கிடங்கு, ஆண்டாள் கோவில் பகுதியில் உள்ள வீடு, குளித்தலையில் உள்ள சிவா டெக்ஸ்டைல்ஸ்ஜவுளிக்கடைமற்றும் வீடு என ஐந்து இடங்களில் நேற்று தொடங்கிய சோதனை நள்ளிரவு வரை நடைபெற்றது.

இதனையடுத்துஇரண்டாவது நாளான இன்றும் தீவிரமாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து இரண்டாவது நாளாக நடைபெறும் சோதனையால் இவர்கள் வரி ஏய்ப்பு செய்திருக்கலாம் எனத்தெரியவருகிறது. வருமான வரித்துறை சோதனையில் பல ஆவணங்கள் கைப்பற்றப்படலாம் என்றும்இறுதியில்தான் இது குறித்து முழு விவரம் தெரியவரும் எனவும்சொல்லப்படுகிறது.

karur
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe