Skip to main content

பார்டர் பரோட்டா கடையில் வருமானவரி சோதனை!

Published on 21/02/2018 | Edited on 21/02/2018
shop


செங்கோட்டை பிரானுர் பார்டரில் உள்ள ரஹ்மத் பரோட்டா கடையில் இன்று வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

நெல்லை மாவட்டம், செங்கோட்டையில் தமிழக - கேரளா எல்லையான பிரானூர் பார்டர், பகுதியில் உள்ள ரஹமத் பரோட்டா கடை மிகவும் பிரபலமானது. சீசன் காலத்தில் குற்றாலத்திற்கு வரும் மக்கள் அனைவரும் தவறாமல் செங்கோட்டை பார்டர் பரோட்டா கடைக்கு வந்து சாப்பிட்டு விட்டு தான் செல்வார்கள். எப்போது சென்றாலும் வரிசையில் நின்று தான் சாப்பிட வேண்டும். அந்த அளவிற்கு பார்டர் ரஹ்மத் பரோட்டா கடை ரூசியில் நம்பிக்கையான பெயர் பெற்றது.

இந்தநிலையில் இன்று மாலை, திடீரென பிரானுர் பார்டரில் உள்ள ரஹ்மத் பரோட்டா கடையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ரஹ்மத் பரோட்டா கடை உரிமையாளரின் வீட்டிலும் அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

திமுக பிரமுகர் அலுவலகத்தில் வருமான வரித்துறை திடீர் சோதனை

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
 Income Tax officials conducted a surprise raid at the office of a DMK official

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த காங்கேயநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் நா.அசோகன். வேலூர் மாநகர மாவட்ட திமுக பொருளாளராகவும், இந்து சமய அறநிலையத்துறை அறங்காவலர் குழு தலைவராகவும் உள்ளார். இவர் அரசு ஒப்பந்ததாரராகவும், தோட்டப்பாளையம் பகுதியில் பிரிண்டிங் பிரஸ் வைத்தும் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் மார்ச் 19 ஆம் தேதி இரவு சுமார் 7 மணி அளவில் வேலூரை சேர்ந்த கூடுதல் கமிஷனர் பூரணசந்திரன் தலைமையிலான நான்கு பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் திமுக நிர்வாகி அசோகனுக்கு சொந்தமான தோட்டப்பாளையம் டி.பி.கிருஷ்ணசாமி நகர் பகுதியில் உள்ள பிரிண்டிங் பிரஸ் அலுவலகத்தில் காவல்துறை பாதுகாப்புடன் திடீர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது அலுவலக ஊழியர்கள் மற்றும் அசோகனின் மகன் அரவிந்தன் இருந்துள்ளனர். பணம் ஏதேனும் இருக்கிறதா என சோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் பணம் எதுவும் இல்லாத நிலையில் வங்கி தொடர்பான ஆவணங்களை கணினி மூலம் வருமான வரித்துறையினர் ஆய்வு செய்தனர். இந்த சோதனையின் போது அலுவலகத்தின் ஷட்டர் மூடப்பட்டிருந்தது.  

சுமார் இரண்டரை மணி நேரத்திற்கு பிறகு இரவு சுமார் 9:43 மணிக்கு சோதனை முடிந்து அதிகாரிகள் புறப்பட்டுச் சென்றனர். இதில் பிரிண்டிங் பிரஸ்சின் வங்கி தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்கும்படி சம்மன் வழங்கியதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக திமுக நிர்வாகி அசோகனின் மகன் அரவிந்தன் கூறுகையில், 'முதலில் பணம் ஏதேனும் இருக்கிறதா என்று சோதனையிட்டார்கள் பணம் எதுவும் கிடைக்காத நிலையில் வங்கி ஆவணங்களை மட்டும் சரிபார்த்து சென்றார்கள்' என கூறினார்.

Next Story

மருந்து தயாரிப்பு நிறுவன உரிமையாளர் வீட்டில் ஐ.டி சோதனை

Published on 19/01/2024 | Edited on 19/01/2024
IT audit at pharmaceutical company owner's home

சென்னையில் இன்று பல இடங்களில் வருமானவரி மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை கேகே நகர் 80-வது தெரு ரமணியம் அடுக்குமாடி குடியிருப்பில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதேபோல் சென்னை யானைக்கவுனியில் லால் என்பவரின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

கவர்லால் கம்பெனி என்ற மருந்து தயாரிப்பு நிறுவன உரிமையாளரான லாலின் வீடுகளில், அலுவலகங்களில் சோதனையானது நடைபெற்று வருகிறது. ஏற்கனவே கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு லாலின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி இருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.