Skip to main content

அருப்புக்கோட்டை செய்யாத்துரை வீட்டில் மீண்டும் ஐ.டி. ரெய்டு!

Published on 07/09/2018 | Edited on 07/09/2018


கடந்த ஜூலை மாதம், நெடுஞ்சாலைத்துறை கான்ட்ராக்டர் செய்யாத்துரை மற்றும் அவருடைய மகன் நாகராஜுவின் சென்னை மற்றும் அருப்புக்கோட்டை அலுவலகங்கள், வீடுகள், மதுரை விடுதியில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு, விசாரணை நடத்தினார்கள். அதன் தொடர்ச்சியாக, இன்று இரு வாகனங்களில் மீண்டும் அருப்புக்கோட்டை வந்த வருமான வரித்துறையினர், செய்யாத்துரையின் வீட்டில் சோதனை நடத்துகின்றனர்.

மேலும், இதற்காக செய்யாதுரையின் மகன் நாகராஜூவை சென்னையிலிருந்து அழைத்து வந்து அவரது வீட்டில் சோதனை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

செய்யாதுரை வீட்டில் 8 மணி நேரமாக தொடரும் விசாரணை

Published on 07/09/2018 | Edited on 07/09/2018
s

 

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தமிழக அரசு நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர் செய்யாதுரை வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.   செய்யாதுரை வீட்டில் 8 மணி நேரமாக சோதனை தொடர்கிறது.  

 

கடந்த ஜூலை மாதத்தில்  செய்யாதுரை மற்றும் அவருடைய மகன் நாகராஜுவின் சென்னை மற்றும் அருப்புக்கோட்டை அலுவலகங்கள், வீடுகள், மதுரை விடுதி என்று 30 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை . அந்த அசோதனையில் மூட்டை மூட்டையாக ஆவணங்கள்,  பணக்கட்டுகள், பெட்டி பெட்டியாக தங்கம் சிக்கின. அதன் அடிப்படையில் விசாரணை நடத்தினார்கள்.

 

இந்நிலையில்  இன்று இரு வாகனங்களில் மீண்டும் அருப்புக்கோட்டை வந்த வருமான வரித்துறையினர் செய்யாதுரையின் வீட்டில் சோதனை நடத்தினர். இந்த சோதனை இரவு 9.30 மணிக்கு மேலும் தொடர்கிறது.

 

Next Story

செய்யாதுரை மகனின் நண்பருக்காகக் காரைக்குடியில் காத்திருக்கும் வருமான வரித்துறையினர்..!!! 

Published on 24/07/2018 | Edited on 24/07/2018
car

 

 

 


தன்னுடைய வீடு, அலுவலகம் மட்டுமில்லாது நண்பர்களின் அலுவலகம், வீடு என வருமான வரித்துறையின் தொடர் ரெய்டில் மாட்டியவர் அருப்புக்கோட்டை செய்யாத்துரை. ஆளுங்கட்சியினரின் ஒத்துழைப்போடு மிகப்பெரிய ஒப்பந்ததாரராக வலம் வந்த செய்யாத்துரையை குறிவைத்து ரெய்டு அடித்த, செய்யாத்துரையின் மகனின் தொடர்புகளில் கவனம் செலுத்தி ரெய்டு செய்து வருகின்றது. இதனின் தொடர்ச்சியாக செய்யாத்துரையின் மகன் ஒருவரின் நண்பரான கிருஷ்ணன் என்பவரைத் தேடி சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு வந்துள்ளது வருமான வரித்துறை. வீடு பூட்டிக்கிடப்பதால் நீண்ட நேரமாக காத்திருக்கின்றது வருமானவரித்துறை டீம்.