கடந்த ஜூலை மாதம், நெடுஞ்சாலைத்துறை கான்ட்ராக்டர் செய்யாத்துரை மற்றும் அவருடைய மகன் நாகராஜுவின் சென்னை மற்றும் அருப்புக்கோட்டை அலுவலகங்கள், வீடுகள், மதுரை விடுதியில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு, விசாரணை நடத்தினார்கள். அதன் தொடர்ச்சியாக, இன்று இரு வாகனங்களில் மீண்டும் அருப்புக்கோட்டை வந்த வருமான வரித்துறையினர், செய்யாத்துரையின் வீட்டில் சோதனை நடத்துகின்றனர்.
மேலும், இதற்காக செய்யாதுரையின் மகன் நாகராஜூவை சென்னையிலிருந்து அழைத்து வந்து அவரது வீட்டில் சோதனை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.